யாழில் மைத்திரி வருகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! படங்கள் இணைப்பு

ஆசிரியர் - Admin
யாழில் மைத்திரி வருகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! படங்கள் இணைப்பு

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்துவைப்பதற்காக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  இன்று யாழ்.வருகைதரவுள்ள நிலையில் அவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்தும், காணாமலாக்கப்பட்ட பாதிரியார்கள் குறித்து ம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கா த நிலையில் ஐனாதிபதி புனித பத்திரிசி யார் கல்லூரிக்கு வருகை தருவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

யாழ்.பிரதான வீதியில் காலை 9 மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புனித பத்திரிசியார் கல்லூரியி ன் பழைய மாணவர்களால் இந்த போராட் டம் நடத்தப்படுகிறது.

அதாவது குறித்த பாடசாலை அதிபராக இருந்த. பிரான்சிஸ் (மைக்கல்) ஜோசப் அடிகளார். கல்லூரி அதிபர் பணிக்காலம் நிறைவுற்றதும் முற்றுமுழுதாக ஈழ மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவே தனது இறுதி மூச்சுவரை மக்களோடு நின்று உழைத்தவர்.

2009 மே 18 அன்று வெள்ளை கொடியுடன் சரணடையச் சென்று இன்றுவரை காணாமலாக்கப் பட்டவர்களில் அடிகளாரும் ஒருவர்.

அத்துடன் அதே மே 18 ஆம் திகதி கோரமாகக் கொல்லப்பட்ட குழந்தையின் உடல் கண்டு மாரடைப்பில் இறந்த சரத் ஜீவன் அடிகளார், இன்னும் முடிவு தெரியாத ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும்பலரைப் பற்றி இலங்கை பொறுப்புக்கூறாத நிலையில் ஜனாதிபதி இந்த கல்லூரிக்கு வருவதை எதிர்ப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவோர் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு