யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது..! யாரும் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது..! யாரும் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நரம்பியல் வைத்திய நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வைத்தயசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டிருகின்றது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ச.ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நரம்பியல் வைத்திய நிபுணருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 

அது குறித்து எவரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. போதனா வைத்தியசாலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வைத்தியருக்கு தொற்று உறுதியான நிலையில், 

வைத்தியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கலந்துரையாடப்பட்டு தொற்றுக்குள்ளான வைத்தியர் சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பட்டிருக்கின்றார். மேலும் வைத்திய வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் 

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுகின்றன. அவற்றை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிடுவது தொடர்பில் 

சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு