யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரிதொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்க யாழ் வருகிறார் மைத்திரி.

ஆசிரியர் - Admin
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரிதொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்க யாழ் வருகிறார் மைத்திரி.

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick’s College) அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (19) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வு கல்லூரியின் முகாமையாளர் யாழ்.ஆயர் கலாநிதி யஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், கல்வி அமைச்சர் அகிலவிரஜ் காரியவசம், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு