ஐனாதிபதிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டமா?

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டமா?

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய் வு கூடத்தை திறந்துவைப்பதற்காக ஐனா திபதி மைத்திரிபால சிறிசேனா நாளை யா ழ்.வருகைதரவுள்ள நிலையில் அவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப் படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரு கிறது.

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்தும், கா ணாமலாக்கப்பட்ட பாதிரியார்கள் குறித்து ம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கா த நிலையில் ஐனாதிபதி புனித பத்திரிசி யார் கல்லூரிக்கு வருகை தருவதை எதிர்த் தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதா க செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவ து, பாடசாலையின் பழைய மாணவர்களால் ஐனாதிபதியின் வருகைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றார்கள்.

அதாவது குறித்த பாடசாலை அதிபராக இருந்த. பிரான்சிஸ் (மைக்கல்) ஜோசப் அடிகளார். கல்லூரி அதிபர் பணிக்காலம் நிறைவுற்றதும் முற்றுமுழுதாக ஈழ மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவே தனது இறுதி மூச்சுவரை மக்களோடு நின்று உழைத்தவர்.

2009 மே 18 அன்று வெள்ளை கொடியுடன் சரணடையச் சென்று இன்றுவரை காணாமலாக்கப் பட்டவர்களில் அடிகளாரும் ஒருவர்.

அத்துடன் அதே மே 18 ஆம் திகதி கோரமாகக் கொல்லப்பட்ட குழந்தையின் உடல் கண்டு மாரடைப்பில் இறந்த சரத் ஜீவன் அடிகளார், இன்னும் முடிவு தெரியாத ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும்பலரைப் பற்றி இலங்கை பொறுப்புக்கூறாத நிலையில் ஜனாதிபதி இந்த கல்லூரிக்கு வருவதை எதிர்ப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் ஆர்ப்பாட்டம் நடத்தபோவது யார்? என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு