சற்றுமுன் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி

ஆசிரியர் - Admin
சற்றுமுன் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

News 2: சிறுப்பிட்டி விபத்தில் இருவர் பலி!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியில், சிறுப்பிட்டிப் பகுதியிலுள்ள வளைவில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த கிட்னன் பரராஜசிங்கம், நவரட்ணம் ஜெயந்தன் ஆகிய இருவரே உயிரிழந்தவர்களாவர்.

விபத்தில் உயிரிழந்த பராஜசிங்கத்தின் மனைவி குடும்பத்தில் இடம்பெற்ற பிரச்சினை காரணமாக ஒருவகை நச்சு விதையினை உட்கொண்டுள்ளார். மனைவியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அச்சுவேலி வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

அம்பியூலன்ஸ் வண்டியினை பின் தொடர்ந்து சென்ற போது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த மண் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே பராஜசிங்கம் டிப்பர் சில்லினுள் தலை நசியுண்டு உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.

சடலங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு