யாழ்.மாவட்டத்தில் குற்ற செயல்கள் பாரியளவு குறைந்துள்ளது

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் குற்ற செயல்கள் பாரியளவு குறைந்துள்ளது

யாழ்.மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு சம்மந்தமான பிரச்சினைகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரனுக்குமிடையில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

மேற்படி கலந்துரையாடல் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி த்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் பாரியளவில் குற் ற செயல்கள் குறைந்துள்ளதாக பொலிஸார் எமக்கு கூறியிருக்கின்றார்கள். ஆனாலும் ம

ணல் கடத்தல் என்பது பாரிய பிரச்சினையாக உள்ளதாக கூறியதுடன் அதனை தடுப்பதற்காக தாம் எடு க்கும் நடவடிக்கைள் தொடர்பாக பொலிஸார் விரிவான விளக்கத்தை எமக்கு வழங்கியிருந்தார்கள். மே லும் யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகள் களவாடப்படும்

சம்பவங்கள் அதிகரித்துள்ளதை பேசினோம். இதன்போது மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்தால் எ ன்ன? என பொலிஸார் வினவினர். ஆனால் மாட்டிறைச்சியை தடை செய்தால் மாட்டிறைச்சி உண்பவர்க ள் அதனை கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாகும். அந்த யோசணையை நாங்கள் நிர

hகரித்துள்ளோம். மேலும் கால்நடைகள் களவாடப்படுவதை தடுப்பதற்காக எடுக்ககூடிய நடவடிக்கை கள் தொடர்பாக ஆராய்ந்தோம். அதேபோல் கால்நடைகள் களவாடப்படுவதை தடுக்க தாம் உச்சக்க ட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பொலிஸாருடைய

பயன்பாட்டில் உள்ள பொதுமக்களுடைய வீடுகளை மீள கையளிப்பது தொடர்பாக பேசியிருந்தோம். கு றிப்பாக காங்கேசன்துறையில் 55 வீடுகளை 111 பொலிஸாருடைய பயன்பாட்டுக்காக வைத்திருக்கின்ற மை தொடர்பாக பேசப்பட்டது. அதற்கு மாற்று காணி ஒன்றை பெற்று நிரந்தரமாக ஒரு கட்

டிடத்தை அமைத்த பின்னர் தாம் வீடுகளை தருவதாக கூறினார்கள். மேலும் காங்கேசன்துறை நடேஸ் வரா கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றையும், கிணறு ஒன்றையும் பொலிஸார் தம் பயன்பாட்டில் வைத்திருக்கின்றமை தொடர்பாக சுட்டிக்காட்டினேன். உடனடியாகவே அந்த கட்டிடத்i

தயும், கிணற்றையும் விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வடமா காணத்தில் தமிழ் பொலிஸார் இல்லாமை தொடர்பாக பேசப்பட்டபோது 81 ஆண் தமிழ் பொலிஸாரும், 2 பெண் தமிழ் பொலிஸாரும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியிருந்தா

ர்கள். தமிழ் இளைஞர்களை பொலிஸில் இணையுமாறு கூறுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பின ர் ஒருவர் என்னை விமர்சித்திருந்தார். ஆனால் தமிழ் பொலிஸார் இல்லாமையினால் தமிழ் மக்களே அதி கம் பாதிக்கப்படுகின்றார்கள். வீதி ஒழுங்கு விதிகள் மீறப்படுவது தொடர்பாக பேசப்பட்டபோது

 இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு