காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்..

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்தி ருந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஒரு வருடத்தை அடைந்துள்ள நிலையில் இன்று காலை காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

இன்று காலை 10.30 மணிக்கு மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தையும், மாபெரும் கண்டன பேரணியையு ம் நடத்தியுள்ளனர். வடக்கில் தொடர்சியா காணாமல்ப் போனவர்களின் உறவுகள் நாம் தினமும் கண்ணீரோடு போராடி வருகிறோம்,இதனை எமது அரசியல் தலைமைகள் கூட கவனிக்காத நிலை உள்ளது.இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் அமர்வுக

ளில் இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் மற்றும் படுகொலைகள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விசாரணைகளை சர்வதேசப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு,பாதிக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு