மாகாணசபை 5,000, பாராளுமன்றம் 10,000- புதிய சுதந்திரனின் கட்டண பட்டியல்- இப்பொழுதுதான் நிம்மதியாகும் உறுப்பினர்கள்!

ஆசிரியர் - Admin
மாகாணசபை 5,000, பாராளுமன்றம் 10,000- புதிய சுதந்திரனின் கட்டண பட்டியல்- இப்பொழுதுதான் நிம்மதியாகும் உறுப்பினர்கள்!

தமிழரசுகட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் இன்று வெளிடப்பட்டது. தமிழ் சிஎன்என் என்ற இணையத்தளத்தை நடத்திவரும் அகிலன் முத்துக்குமாரசாமியே இந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர்.

கடந்த இரண்டு வருடத்திற்கும் அதிகமாக, தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு பின்னாலும் முன்னாலும் திரிந்து, கட்சி பத்திரிகையை தொடங்க வேண்டுமென நச்சரித்து வந்த நிலையில் இபபொழுது அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது தமிழ் சிஎன்என் நிறுவனத்தில் பணியாற்றியவர்களிற்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

தற்போது தமிழரசுக்கட்சியை கனடாவிலிருந்து வழிநடத்தும் அணியுடன் இணைந்து, பத்திரிகையை ஆரம்பித்துள்ளார்.

இந்த பத்திரிகைக்கான பணத்தை கட்சி உறுப்பினர்களே செலுத்த வேண்டும். மாகாணசபை உறுப்பினர்கள் 5,000 ரூபாவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் 10,000 ரூபாவும் மாதாந்தம் வழங்க வேண்டும்.

பணம் வழங்க வேண்டுமென்றதில் கலக்கத்தில் இருந்த கட்சி உறுப்பினர்கள், இன்றைய பத்திரிகையை பார்த்த பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த பத்திரிகை ஓரிரு மாதங்களே தாங்காது என வெளிப்படையாக பேசிக்கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு