கொக்குவில் சந்தியில் கேக் வெட்டிய போது ஏற்பட்ட தகராறால்தான் ஹாட்வெயாரை உடைத்தோம் - சந்தேகநபர்கள் வாக்குமூலம்!

ஆசிரியர் - Admin
கொக்குவில் சந்தியில் கேக் வெட்டிய போது ஏற்பட்ட தகராறால்தான் ஹாட்வெயாரை உடைத்தோம் - சந்தேகநபர்கள் வாக்குமூலம்!

“கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்” என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அத்துடன், ஹாட்வெயார் உரிமையாளரும் அடாவடிக் கும்பல் ஒன்றை தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்தார் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அடாவடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.

தாக்குதலையடுத்து 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் சந்தேகநபர்கள் 4 பேரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர். எனினும் சாட்சியாளர்களில் ஒருவர் வைத்தியசாலையில் என பொலிஸாரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து அடையாள அணிவகுப்பை வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றுவரை சந்தேகநபர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கில் பொலிஸாரால் தேடப்பட்டவர்களில் ஒருவர், சட்டத்தரணி ஊடாக மன்றில் முற்பட்டார். அவரையும் வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மேலும் 8 பேரின் பெயர்களைக் குறிப்பிட்ட பொலிஸார் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு