யாழ். பொம்மைவெளியில் தமிழ் – முஸ்லிம்கள் சிலர் இடையே முறுகல் – சுமுகமாகத் தீர்க்க பொலிஸார் நடவடிக்கை!

ஆசிரியர் - Admin
யாழ். பொம்மைவெளியில் தமிழ் – முஸ்லிம்கள் சிலர் இடையே முறுகல் – சுமுகமாகத் தீர்க்க பொலிஸார் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் பள்ளிவாசல் முன்பு முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு ஆட்சேனையை தெரிவித்ததையடுத்து முஸ்லிம்கள் சிலருக்கும் தமிழ் இளைஞர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் அதனைச் சுமுகமாக முடிக்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

“யாழ்ப்பாணம் பொம்மைவெளியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக தமிழ் இளைஞர் ஒருவரால் வியாபார நிலையம் ஒன்று நடத்தப்படுகிறது. அந்தக் கடையைச் சேர்ந்தவர்கள் தமது முச்சக்கர வண்டியை பள்ளிவாசல் முன்பாக நிறுத்தி வந்துள்ளனர்.

பள்ளிவாசல் முன்பாக முச்சக்கர வண்டியை நிறுத்துவதால் தமக்கு இடையூறாக இருப்பதாக முஸ்லிம்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனால் அந்தக் கடையைச் சேர்ந்தோருக்கும் முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே இன்று பகல் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார், இரு தரப்புக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் அந்தக் கடையைச் சேர்ந்தவர்கள் வேறு சிலர் இன்றிரவு மீளவும் அந்தப் பிரச்சினையை பெரிதாக்க முற்பட்டனர். அதனால் கடை உரிமையாளரின் சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் அழைத்துவரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு