SuperTopAds

சித்ராவின் போனில் இருந்த ஆதாரங்கள் அழிப்பு!! -கணவரிடம் 4 ஆவது நாளாகவும் தொடரும் தீவிர விசாரணை-

ஆசிரியர் - Editor II
சித்ராவின் போனில் இருந்த ஆதாரங்கள் அழிப்பு!! -கணவரிடம் 4 ஆவது நாளாகவும் தொடரும் தீவிர விசாரணை-

உயிரிழந்த நடிகை சித்ராவின் கைத்தொலைபேசியில் இருந்த ஆதாரங்கள், படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், கணவர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து 4 ஆவது நாளாக தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த துன்புறுத்தலே காரணம் என பொலிஸார் தெரிவித்து உள்ளனர். கணவர் ஹேம்நாத், சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும், அவர் தொடர்ந்து நடிக்கக்கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

திருமணமானவுடன் கணவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும் என சித்ராவின் தாயும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாறி மாறி இரு தரப்பில் இருந்தும் கொடுத்த அழுத்தம் காரணமாக சித்ரா நிம்மதி இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவில் காரில் கணவருடன் ஹோட்டலுக்கு திரும்பி இருக்கிறார். அப்போதும் அவர்களுக்குள் இந்த பிரச்சினை எழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சித்ரா பயன்படுத்திய கைத்தொலைபேசியை பொலிஸார் போலீசார் ஆய்வு செய்தனர். இறப்பதற்கு முன்பு யார் யாரிடம் பேசி இருக்கிறார்? என்ன பேசி இருக்கிறார்? என்பதை அறிய பொலிஸார் முயற்சித்தனர். ஆனால் கைத்தொலைபேசியில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இது பொலிஸாருக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கைத்தொலைபேசியின் பதிவுகளை மீட்டெடுக்க தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில் இன்று 4 ஆவது நாளாக விசாரணை நடந்து வருகிறது.