தொடரும் இந்திய – சீனா முறுகல் நிலை!! -லடாக் எல்லையில் களமிறக்கப்படும் சிறப்பு கமாண்டோ பிரிவினர்-

ஆசிரியர் - Editor II
தொடரும் இந்திய – சீனா முறுகல் நிலை!! -லடாக் எல்லையில் களமிறக்கப்படும் சிறப்பு கமாண்டோ பிரிவினர்-

இந்திய கடற்படையின் சிறப்பு கெமாண்டோ பிரிவினர் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய கடற்படையின் சிறப்பு பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். கடற்படையின் சிறப்பு பிரிவான மரைன் கெமாண்டோஸ் (மார்க்கோஸ்) வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

லடாக்கின் மேற்கு பகுதியில் உள்ள பங்காங் ஏரிக்கரை பகுதியில் கடற்படையின் சிறப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும், லடாக்கின் சீதோசன நிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு