வடமாகாண முதலமைச்சர் ஆளுநரிடையே கருத்து முரண்பாடு?

ஆசிரியர் - Admin
வடமாகாண முதலமைச்சர் ஆளுநரிடையே கருத்து முரண்பாடு?

வடமாகாணசபையின் செயலாளர்களுக்கிடையேயான இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளதையடுத்து ஆளுநர் -முதலமைச்சரிடையேயான கருத்து முரண்பாடு உச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனிற்கு இம்மாதம் 10ம் திகதி முதல் மத்திய அரசின் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.எனினும் அவர் மீண்டும் தனக்கு கால அவகாசமொன்றை கோரி எம்.ஏ.சுமந்திரன் தரப்பிடம் சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகின்றது.

எனினும் ஏற்கனவே இரண்டுவருடம் முன்னரும் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் அதற்கு உடன்படாததுடன் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரனை கல்வி அமைச்சின் செயலாளராக பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அவரால் செயலாளர்களது உள்ளக இடமாற்றம் தொடர்பில் செய்யப்பட்ட பரிந்துரைகள் தற்போது ஆளுநர் வசமுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதார அமைச்சிலும்; செயலாளராக இ.இரவீந்திரன் பணியாற்றியிருந்தமையால் முன்னாள சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் சரண் அடைந்துள்ளார்.இதனையடுத்து சத்தியலிங்கம் விடயத்தை சத்தியலிங்கம் சுமந்திரனிடம் கொண்டு அசல்ல அவர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சின் செயலாளர்களது உள்ளக இடமாற்றம் தொடர்பிலான முதலமைச்சரது பரிந்துரைகளை முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்த ஆளுநர் தற்போது பின்னடிப்பதாக முதலமைச்சர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொழும்பிலுள்ள முதலமைச்சர் திரும்பியபின்னர் நீண்டகாலவமாக வடமாகாணசiபியில் கதிரைகளில் அமர்ந்திருக்கும் செயலாளர்கள் தொடர்பில் நடவடிக்கை தீர்;க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகன முறைகேடுகள்,ஒப்பந்த முறைகேடுகள் மற்றும் முன்னாள் சகாதார அமைச்சராக சத்தியலிங்கம் இருந்த காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்ததுடன் அவரது முறைகேடுகளிற்கு உதவியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இ.இரவீந்திரனின் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் கீழ் மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பல பதவிகளை பெற அவர் முற்பட்டிருந்த போதும் அவை சாத்தியப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் இடமாற்ற உத்நரவுகளும் இடைநிறுத்தப்பட்டன. தற்போது தேர்தல் முடிவுற்ற நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மனோ கணேசனின் அமைச்சான தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

gov

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு