விமான நிலையத்தில் கைதான முன்னாள் அரசியல் கைதி ஆறு மணிநேரத்தின் பின் விடுதலை

ஆசிரியர் - Editor I
விமான நிலையத்தில் கைதான முன்னாள் அரசியல் கைதி ஆறு மணிநேரத்தின் பின் விடுதலை

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட முருகையா கோமகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு செல்ல முற்ப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்தார்.

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயண தடையும் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய தினம் இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட போதே இவர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணத் தடை நீக்கப்பட்டமைக்கான அறிவித்தல் கிடைக்காத நிலையிலேயே முருகையா கோமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முருகையா கோமகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்இ அவரது தாயார் தெரிவித்தார்.

இது தொடர்பில் கோமகனின் சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பயணத்தடை நீக்கப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவிடமிருந்து அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக கோமகனின் தாயார் தெரிவித்துள்ளார்.

பின் இணைப்பு...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார். 

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது விமான நிலையப் பொலிஸாரால் இன்று நண்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்ட கோமகன் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் ஆறு மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

எதிர்வரும் திங்கட்கிழமை தவறாமல் விசாரணைக்கு சமூகமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை 6.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். 

இவருக்கான பயணத் தடையை நீதிமன்று தளர்த்தியிருந்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்திற்கு எந்த அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே பொலிஸார் கைது செய்திருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு