திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்..! 21 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உடல் கருகி பலியான கோரம்..

ஆசிரியர் - Editor I
திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்..! 21 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உடல் கருகி பலியான கோரம்..

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, முள்ளியவளை நகர் பகுதியில் இருந்து முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் 


முள்ளியவளை ஆலடி பகுதியில்  மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது இதன் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளை யைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio