திங்கள் பாடசாலைகள் ஆரம்பம்..! எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை? நேர ஒழுங்குகள் என்ன? கல்வியமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor
திங்கள் பாடசாலைகள் ஆரம்பம்..! எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை? நேர ஒழுங்குகள் என்ன? கல்வியமைச்சு அறிவிப்பு..

நாடளாவியரீதியில் நாளை மறுதினம் திங்கள் கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம், மற்றும் ஒழுங்குகள் குறித்த முழுமையான தகவல்களை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. 

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,200 இற்கும் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமானால் அனைத்து மாணவர்களையும் அழைக்க முடியும்.

200 ஐ விட அதிக மாணவர்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் கட்டம் கட்டமாக மாணவர்களை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்டு பாடசாலைகளில் ,

திங்கட்கிழமை - 1, 2 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை - 2 , 5 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை - 3 , 5 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 4 , 5 ஆம் வகுப்புக்கள் 

என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. வழமையான நேரத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஏனைய வகுப்புக்கள்

திங்கட்கிழமை - 6 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை - 7 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை - 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 9 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள் 

என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.இவற்றில் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 , 7 , 8 , 9 ஆம் வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 க்கு நிறைவடையும். 

10 , 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடரக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆசிரியர்கள்

திங்கட்கிழமை முதல் அனைத்து ஆசிரியர்களும் வழமையைப் போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும். மாலை 3.30 மணிக்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் வகுப்பாசிரியர்கள் 1.30 மணிக்கு பாடசாலையிலிருந்து செல்ல முடியும் என்றார்.

Radio