SuperTopAds

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்போகும் பொதுஜன பெரமுன..! சுதந்திரகட்சி, ஐ.தே.கட்சி அழிவின் விளிம்பை தொட்டன, ரணில் படுதோல்வி..

ஆசிரியர் - Editor I
அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்போகும் பொதுஜன பெரமுன..! சுதந்திரகட்சி, ஐ.தே.கட்சி அழிவின் விளிம்பை தொட்டன, ரணில் படுதோல்வி..

நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 145 ஆசனங்களை கைப்பற்றியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. 

பொதுஜன பெரமுனவுக்கு போட்டியாக களமிறங்கிய சஜித் பிறேமதாஸ தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அளவில் 54 ஆசனங்களை மட்டும் பெற்றிருக்கின்றன. 

3ம் நிலையில் 10 ஆசனங்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி ஆகின அழிவின் விளிம்பை தொட்டுள்ளதுடன், 

போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் படுதோல்வியடைந்துள்ளன. குறிப்பாக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைந்திருக்கின்றார். 

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலமையிலான பொதுஜன பெரமுன கட்சி 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளை பெற்று 145 ஆசனங்களை பெற்றுள்ளதுடன், 

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போகும், ஈ.பி.டி.பி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அறுதிப் பெரும்பான்மையான அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளது.