வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..!
வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை.
இந்த சம்பவம் பாணந்துறை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நாடளாவிய பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவரும் நிலையில்,
பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த 82 வயதான மினுவம்பிட்டிய காமினி பீரிஸ் என்ற வயோதிபரே
காலை 8.40 மணியளவில் இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். இவர் பாணந்துறை பெக்கேகம, அம்பலாந்துவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவ்வயோதிபர் தனது இல்லத்திலிருந்து புறப்படுகையில் இருதயவலிக்கு உள்ளாகியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியிருக்கின்ற போதிலும்,
இன்னமும் அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.