கட்டுப்பாடுகளை, அறிவுறுத்தல்களை மீறினால் துப்பாக்கி சூடு..! பொலிஸாருக்கு அளிக்கப்பட்டது அதிகாரம்..
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடிகளில் குழப்பம் விளைவித்தல், வாக்கு பெட்டிகளை கொள்ளையிட முயற்சித்தபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் துப்பாக்கி சூடு நடத்த பொலிஸாருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேற்கண்டவாறு கூறினார்.இருப்பினும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதமேந்திய தலா இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கடமையில் நாளை ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்