பொலிஸ் கொலை செய்த அமெரிக்க கறுப்பினத்தவருக்கு கொரோனா!!
பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட கறுப்பின அமெரிக்க பிரஜையான ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரின் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க காவற்துறை அதிகாரி ஒருவரால் அண்மையில் ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பொதுமக்களால் அமெரிக்காவின் பல இடங்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேநேரம், ஜோர்ஜ் ஃப்ளோயிட்டின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட கோரி பல்வேறு உலக நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பொதுசொத்துக்களும் சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், குறித்த மரணித்தினுடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜோர்ஸ் ஃப்ளோயிட்டின் மரணித்திற்கு நேரடி காரணமாக குற்றம் சுமத்தப்பட்ட ட்ரக் சார்வின் (Derek Chauvin) மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரண்டாம் நிலை கொலைகுற்றச்சாட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தின் போது அங்கிருந்த 3 காவற்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.