ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! மே மாத கொடுப்பனவுக்கு ஜனாதிபதி உத்தரவு..
ஓய்வூதியம் பெறும் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் மே மாதத்திற்கான கொடுப்பனவு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைக வழங்கப்படவிருக்கின்றது.
மே-11ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை இந்த கொடுப்பனைவை தபாலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம். நாடளாவியரீதியில் ஓய்வூதியம் பெறும் 162000 விவசாயிகளுக்கும், 4907 கடற்றொழிலாளர்களும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.
விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையின் ஊடாக வழங்கப்படும் இந்த மே மாத கொடுப்பனவுகளுக்காக 831 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.