கொரோனா தொற்றால் இறக்காத இஸ்லாமிய பெண்ணின் உடலை தகனம் செய்தது தவறு..! மிகுந்த கவலையளிக்கிறது என்கிறார் மனோ..
கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மரணமானதாக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை. என அரச இரசாயன ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கும், நிலையில் குறித்த இஸ்லாமிய பெண்ணின் உடலம் தகனம் செய்யப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சர் மனோகணேசன் வருத்தம் தொிவித்துள்ளார்.
இது குறித்து மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின் உடல் முறைதவறி தகனம் செய்யப்பட்டமை கவலையளிக்கிறது. என குறிப்பிட்டுள்ளதுடன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும்
இனரீதியான பாரபட்சத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனரீதியான பாரபட்சத்தைக் கண்டித்து இந்த நடவடிக்கைக்கு எதிராக எனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன். என குறிப்பிட்டிருக்கின்றார்.