மே- 11ம் திகதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் வழமைக்கு திரும்பலாம்..! திட்டமிடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
மே- 11ம் திகதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் வழமைக்கு திரும்பலாம்..! திட்டமிடுகிறது பொலிஸ்..

கொழும்பு, ஹம்பகா, புத்தளம் உள்ளிட்ட அபாய வலயங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் மே-11ம் திகதி பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கலாம் என பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

தொழிலுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டைகளின் இறுதி இலக்கங்களுக்கு அமையவே வீடுகளில் இருந்து வௌியேற முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இருப்பிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு உணவு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாத்திரம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கிணங்கவே வழமை போன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு