அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பிடுங்க நினைக்கும் டி.பி.ஜயசுந்தரவுக்கு, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் கண்ணுக்கு தொியவில்லையா..?
கொவிட் -19 இடர்காலத்தில் தமது அரைவாசி ஊதியத்தை அர்ப்பணிப்பு செய்யுமாறு கேட்கும் ஜனாதிபதி செயலாளருக்கு அரச தரப்பில் உள்ளவர்களுடைய ஊதியம் மற்றும் விசேட கொடுப்பனவுகளை தொியவில்லையா? அதனை கேட்காமல் இருப்பது ஏன்? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வைரஸ் பரவலினால் எதிர்வரும் தினங்களில் பெரும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற வாய்ப்பிருப்பது போல் தற்போதும் அந்த சிக்கலை அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்றது என்பதை அரசாங்கமே எடுத்துகாட்டி வருகின்றது. அதற்கேற்றால்போல் அரச தரப்பைச் சேர்ந்தவரான டி.பி.ஜயசுந்தர
அரச ஊழியர்கள் அவர்களது சம்பளத்திலிருந்து அரைபகுதியை வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்காக அர்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்மை பொருத்தமட்டில் அரச ஊழியர்கள் ஏன் அவர்களது ஊதியத்தை தீயாகம் செய்ய வேண்டும்.
அரச தரப்பைச் சேர்ந்த ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அவர்களது ஊதியம், விசேட கொடுப்பனவு மற்றும் ஏனைய செலவுகளுக்காக பெற்றுக் கொள்ளும் நிதியை அர்பணிக்க முன்வரலாமே. இது எதிர்வரும் தலைமுறைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அல்லவா? அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிதியிலும்
அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதற்கமைய இந்த நிதி வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இடம்பெறும் வரை தம்மால் அந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட முடியாது என்று கிராம சேவகர்கள் அதனை புறக்கணித்து வந்தது மாத்திரமின்றி
அவ்வாறான செயற்பாடுகள் இனி இடம்பெறாது என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் அந்த செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றமையும் நாம் கடந்தகாலங்களில் அவதானித்திருந்தோம். அதற்கமைய நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பல பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பொருந்தோட்ட தொழிலாளர்கள்
மற்றும் ஆடைச் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இதுவரையிலும் இந்த முதற்கட்ட நிதி கூட பெற்றுக் கொடுக்கபடவில்லை என்று தெரியவந்துள்ளது. இது நியாயமற்ற செயற்பாடாகும். அதனால் இவர்களுக்கான நிதியை பெற்றுக் கொடுபதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.