SuperTopAds

சர்ச்சையில் சிக்கினார் மஹிந்த தேசப்பிரிய!

ஆசிரியர் - Admin
சர்ச்சையில் சிக்கினார் மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதியுடனோ, அல்லது பிரதமருடனோ எந்த இரசிய உடன்பாட்டையும் தான் செய்து கொள்ளவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் சிக்கியிருந்த, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் மகன், விதுர காஷியப்ப தேஷப்பிரிய இன்று நாடு திரும்பியுள்ளார்.

தனது மகனை இலங்கைக்கு, அழைத்து வருவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்றுள்ளார் என்று சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மஹிந்த தேசப்பிரிய தனது முகநூலில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மகனை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக தனது பதவியை பயன்படுத்தியதாக சமூக வலைத்தங்களில் வெளியாகியுள்ள செய்தியை முற்றாக மறுக்கிறேன் என்றும் ஒரு தந்தையாக மட்டுமே மகனின் ஆவணங்களை அரச அதிகாரிகளிடம் கையளித்தேன்’ என்றும் அவர் முகநூல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.