SuperTopAds

1ம் பரிசோதனையில் கொரோனா 2ம் பரிசோதனையில் இல்லை..! 3 பேர் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
1ம் பரிசோதனையில் கொரோனா 2ம் பரிசோதனையில் இல்லை..! 3 பேர் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..

1 வது பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்ப ட்டிருந்த நபர் 2 வது பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை என அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியிருப்பதுடன், 3 பேரை பட்டியலில் இருந்து நீக்குவதாகவும் கூறியுள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலை விசேட தர தாதிய உத்தியோகத்தர், ராஜகிரிய, கொலன்னாவ பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் பிசிஆர் பரிசோதனையில் கொரோனாவிற்கு சாதகமான முடிவு கிட்டியதாகவும், 

இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எதிர்மறையான முடிவு கிட்டியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.கொரொனா தொற்றாளர் எண்ணிக்கையிலிருந்து அவர்களை நீக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.