5 ற்கும் மேற்பட்ட பிரதேசங்களில் களமிறக்கப்பட்டிருக்கும் புலனாய்வு பிரிவு..! தீவிர விசாரணை ஆரம்பம்..
கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேருக்கு நோய் தொற்று எவ்வாறு ஏற் பட்டிருந்தது? என்பதை ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினர் களமிறக்கப்பட்டு வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தி யிருக்கின்றார். இது குறித்து மேலும் தொியவருவதாவது, இன்றைய தினத்துக்கள் நோய் காவிகள் தொடர்பாக கருத்தை வெளியிட
எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த 4 பேரும் முகத்துவாரம் இராஜகிரிய, பண்டாரநாயக்கமாவத்தை, கொலன்னாவை சாலமுல்ல மற்றும் மாதம்பை பகுதிகளில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனுடன் நேற்று 20 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 15 பேர் கடற்படையினர் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.