ஜனாதிபதியின் புதிய திட்டம், உத்தரவாதம் இதுதான்..! 11ம் திகதிக்கு பின் 21 மாவட்டங்களில் இயல்புநிலை, அரச, தனியார் நிறுவனங்கள் திறப்பு..
கொழும்பு, ஹம்பகா, களுத்துளை, புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் இலங்கையின் பிற பகுதிக ளில் நாளாந்த இயல்பு வாழ்க்கை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு திருப்புதல் போன்றன இம்மாதம் 11ம் திகதிக்கு பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றன.
மேற்கண்டவாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது, அதன்படி அத்தியாவசிய சேவைகளைத் தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மே 11, திங்கள், முதல் திறக்கப்பட வேண்டும்.
சேவைகளின் தேவையைக் கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களைத் திறந்து பணிகளை மேற்கொள்ளும்போது கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட
சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதை நிறுவனங்களின் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை
மற்றும் சேவைக்கு யாரை எப்போது அழைப்பது என்பதை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.நோய்க்கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு - மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல்
மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.போக்குவரத்துச் சபை பேரூந்துகள் மற்றும் தொடரூந்துகளில் பயணிகள் போக்குவரத்து - தொழிலுக்காகச் செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.கட்டாயமாகத் தொழிலுக்குச் சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய்த் தடுப்பிற்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும்.இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான
சுகாதாரப் பரிந்துரைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.காவல்துறை அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த
ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் - மே 04, திங்கள், காலை 5:00 மணிக்கு நீக்கப்படும்.பின்னர் - மே 06, புதன், வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது, முன்னர் போன்று - இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையாகும். இந்த மாவட்டங்களில் மே 06, புதன், இரவு 8.00 மணிக்குப் பிறப்பிக்கப்படும்
ஊரடங்குச் சட்டம் - மே 11, திங்கள், அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.