14 போதை அடிமைகளுக்கு கொரோனா..! பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் 649 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், 14 பேர் போதை பொருளுக்கு அடிமையாளர்கள் என பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ ண கூறியிருக்கின்றார்.
கொழும்பு வாழைத்தோட்டம் மற்றும் பண்டாரநாயக்க மாவத்தை போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மாதிரிகள்
பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. எனினும் அவர்கள் அனைவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் இன்று வியாழக்கிழமை கோரோனா வைரஸ் தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.