மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்..! கடுமையான விளைவுகளை சந்திக்க நோிடும், ஜனாதிபதிக்கு எச்சரிக்கை..
இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மருத்துவ பணியா ளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர், ஹரித அலுத்கே கூறியிருப்பதாக சிங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னரங்கப் பணியாளர்களின் பாதுகாப்பினை உரிய முறையில் உறுதி செய்யத் தவறினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னரங்கப் பணியாளர்களுக்கு போதியளவு பாதூப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை. சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.
கொரோனா ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னரங்கப் பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பதனை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.