கொழும்பில் போதை அடிமைகளுக்கே கொரோனா தாக்கம் அதிகம்..! புலனாய்வு பிரிவு, சுகாதார பிரிவு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதாம்..
இலங்கையில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பலர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என அறியப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கூறியிருக்கின்றார்.
குறித்த தகவல் புலனாய்வு பிரிவு மற்றும் சுகாதார பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவு ம் அவர் கூறியிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில், கடந்த திங்கள் (27) வெலிக்கடை பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுக்கு அடிமையான 48 பேர்
கண்டறியப்பட்ட நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன் நெருக்கமான பகுதிகளில் வீட்டுத் தொகுதிகளில் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறும்,
அதுகுறித்து தகவல் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.