SuperTopAds

1000 பிரேத பைகள் கேட்ட கடிதம் எப்படி வெளியே கசிந்தது..? பதறுகிறது அரசு, CID விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
1000 பிரேத பைகள் கேட்ட கடிதம் எப்படி வெளியே கசிந்தது..? பதறுகிறது அரசு, CID விசாரணை ஆரம்பம்..

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக சர்வதேச நியமங்களின் படி அதற்குரிய 1000 பை களை வழங்குமாறு சுகாதார அமைச்சு ஐ.சி.ஆர்.சியிடம் கேட்ட கடிதம் வெளியில் கசிந்தது எவ்வாறு? 

அந்த கடிதத்தை பயன்படுத்தி அமைதியின்மை மற்றும் சமூக குழப்பத்தை உருவாக்க நினைத்தவர்கள் யார்? என்பது தொடர்பாக குற்ற CID விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 24ம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அந்த கடிதத்தில் 1000 பிரேதபைகளை சுகாதார அமைச்சு ஐ.சி.ஆர்.சியிடம் கோரியிருந்த விடயம் வெளியாகியிருந்தது. 

இதனையடுத்து இலங்கையில் 1000 நபர்கள் இறக்கப்போகிறார்களா?என கேள்விகளும் எழுந்திருந்த நிலையில், ஏற்கனவே சுகாதார அமைச்சிடம் கையிருப்பில் இருந்த 300 பிரேத பைகளை சகல வைத்தியசாலைகளுக்கும் 

பகிர்ந்து கொடுத்துவிட்ட நிலையில் சுகாதார அமைச்சின் கையிருப்பில் இருக்கவேண்டிய பொருட்கள்தொடர்பாக ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஐ.சி.ஆர்.சியினர் தங்களிடம் இந்த பிரேத பைகள் 1000 இருப்பதாகவும், 

அதனை வழங்கதயாராக உள்ளதா கவும் கூறியதற்கு அமையவே சுகாதார அமைச்சு அதனை பெற நினைத்தது. தவிர 1000 பேர் இறக்கும் நிலை உள்ளது. அதற்காக அவசியம் தேவை என்பதற்காக அந்த பைகளை சுகாதார அமைச்சு கேட்டிருந்தது. 

மேலும் கொரோனா தொற்றினால் இறந்தவர்களை வைப்பதற்கான பிரத்தியே பைகள் அல்ல. அவை, உண்மையில் உயிரிழந்த எவராக இருந்தாலும், எந்த நோயினால் இறந்தாலும் பிரேதங்க ளை வைப்பதற்கான பைகளே, 

என சுகாதார அமைச்சு விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் அரசாங்கம் குறித்த கடிதம் எப்படி வெளியே கசிந்தது? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக CID விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.