SuperTopAds

மீறுவது எவராக இருந்தாலும் உடனடியாக கைது..! கேள்வி எழுப்பினால் நீதிமன்றம் சென்றும் பதிலளிக்க தயார், பொலிஸார் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
மீறுவது எவராக இருந்தாலும் உடனடியாக கைது..! கேள்வி எழுப்பினால் நீதிமன்றம் சென்றும் பதிலளிக்க தயார், பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் சட்டரீதியாகது. அதனை கேள்விக்குள்ளாக்க விரும்பினால் நீதிமன்றம் சென் றாலும் பதிலளிக்க நாங்கள் தயாராகவுள்ளோம். அதேபோல் அதனை மீறினால் அவர் எவராக இருந்தாலும் கைது செய்வோம். அதி ல் மாற்றுக்கருதில்லை. என பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை சட்ட ரீதியானது. இதற்கான அனைத்து அதிகாரங்களும் சட்ட ரீதியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் ஊடாக அந்த அதிகாரம், 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து 5 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிதாக வர்த்தமானிகளை அச்சிட்டு இருக்க வேண்டியதில்லை. கடந்த மார்ச் 20, 25 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியும் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனைவிட கடந்த 1925, 1960 ஆம் ஆண்டுகளில் வர்த்தமானி அறிக்கைகளும் இதற்கு பொருந்தும் இதனூடாக தனிமைப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல், ஒரு கட்டிடத்திலிருந்து ஆட்களை அப்புறப்படுத்தல், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுக்க முடியும். 

அதற்கான சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ளது. அதன் படியே நாம் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமையையும் பிறப்பித்துள்ளோம். எவரேனும் நீதிமன்றில் இதனை சவாலுக்கு உட்படுத்தினால் நாம் பதிலளிக்கத் தயார்.ஊரடங்கு நிலைமையை எவரேனும் மீறினால் கண்டிப்பாக நாம் அவர்களைக் கைது செய்வோம். 

தொற்றுநோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் கீழும், அதனை ஒத்த அத்தியாயமான குற்றவியல் சட்டத்தின் 264 ஆவது பிரிவின் கீழும் இதற்கான இயலுமை உள்ளது  என தெரிவித்தார்.