கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கையில் ஜனாதிபதி தோற்றுவிட்டார்..!
இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கையில் அரசாங்கம் தோற்றுவிட்டுது. என ஐக்கியதேசிய கட்சியினர் குற்றச்சாட்டியிருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ர உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது..உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இது வரையில் இலங்கையிலும் 592 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் இந்த வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த
அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்து வருகின்றது.ஆனால் உண்மையிலையே தொற்று பரவலைக் கட்டப்படுத்த அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகைள் தோல்வி அடைந்துள்ளது.
இதனாலே பாதிப்பு அதிகரித்து வருகின்றது.எனவே உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டியது மிக அவசியமானது. அது மாத்திரமல்லாமல் கொரோனோ தொற்று பரிசொதனைகளை முதலில் அதிகரிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.