கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக ஊரடங்கு சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்..!
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு சட்டத்தை முறைகேடாக அமுல்ப்படுத்திய நாடுபகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்பட்டிருக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவே இலங்கையையும் உள்ளடங்கியுள்ளது. இந்த காலப்பகுதியில் உலக அளவில் 80 நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்கியுள்ளன.
அவற்றில் இலங்கை, நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிகா, ஃபிலிப்பின்ஸ், எல் சல்வடோர், டொமினிக்கன் குடியரசு, பெரு, ஹொன்டுராஸ், மொரோகோ, கம்போடியா, உஸ்பெகிஸ்தான், ஈரான்
மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஊரடங்கு சட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ஊரடங்கு சட்டத்தின் பின்னர் காவற்துறையினர் செயற்பாடுகள், கைதுகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்குவதன் மூலம், பொதுமக்களை கட்டுப்படுத்தவும், ஆட்சியை நீடித்துக் கொள்ளவும் ஊரடங்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்று, மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்செலெட் தெரிவித்துள்ளார்.