கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக ஐ.சி.ஆர்.சியிடம் 1000 பைகள் கேட்ட கடிதம் எப்படி கசிந்தது..? தீவிர விசாரணைக்கு அரசு நடவடிக்கை..
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சர்வதேச நியமத்திற்கமைய பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கு ஏற்றவகையி ல் 1000 பிரேத பைகளை வழங்குமாறு ஐ.சி.ஆர்.சியிடம் சுகாதார அமைச்சு கோரிய கடிதம் எப்படி வெளியே சென்றது என்பது குறித் து விசாரணைகளை நடாத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக சுகாதார அமைச்சு ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன், இது குறித்து விசாரணை நடாத்துமாறு பொலிஸாரிடம் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.