போர்க்காலத்தை ஒத்தவகையில் முப்படையினரும் களத்திற்கு அழைக்கப்பட்டனர்..! நாளை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு பிற்போடப்பட்டது. மக்களே அவதானம்..
இலங்கையில் கொரோனா அபாயம் உள்ள பகுதிகளான கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த 21 மா வட்டங்களில் நாளை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஷ
விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தமது பணியிடங்களுக்கு உடனடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில்
நாளை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த முறையின்படியான ஊரடங்குச் சட்டம், நாளை மறுதினம் செவ்வாய்கிழமையில் இருந்து நடைமுறையில் இருக்கும்.
இதன்படி - கொழும்பு , களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்
அன்றிரவு 8:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும். இந்த நடைமுறை, மே 1ஆம் திகதி, வெள்ளி, வரை தொடரும்.