SuperTopAds

அதிகாலையில் கடற்படை அதிகாரி உயிரிழக்க கொரோனா காரணமா..? பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கடற்படை அதிகாரி உயிரிழக்க கொரோனா காரணமா..? பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..

கொரோனா அபாயத்தால் முடக்கப்பட்டிருக்கும் வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிலையில் எலி காய்ச்சலினால் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வெலிசறை கடற்படை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கலென்பிந்துவேவா பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் சுனில் பண்டார (35-) வயது என்பவர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் வெலிசறை கடற்படை தளத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா நடைமுறையை 

பின்பற்றி அவரது இறுதி சடங்கை செய்ய சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.