SuperTopAds

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது அரசு..! கடும் எதிர்ப்பு காரணமா..?

ஆசிரியர் - Editor I
இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது அரசு..! கடும் எதிர்ப்பு காரணமா..?

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டத்தை தளர்தும் அறிவிப்பிலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளதுடன், 21 மாவட்டங்களில் மட்டுமே ஊரடங்கு சட்டம் த ளர்த்தப்படவுள்ளதாக அறிவித்திருக்கின்றது. 

இதன்படி கொழும்பு , கம்பஹா, களுத்துறை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை 5 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும் ஏனைய மாவட்டங்களில் 

திங்கட்கிழமை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப் படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதேவேளை ஊரடங்கு தளர்த்தும் தீர்மானத்தை மருததுவ சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் தீவிரமாக எதிர்த்துள்ளன.