ஊரடங்குச் சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..! பொலிஸ் தலமையகம் இன்று அதிகாலை அறிக்கை..
உயர் ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் உள்ளடங்கலாக நாடு முழுவதும் 27ம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும். என பொலிஸ் தலமையகம் அறிவித்திருக்கின்றது.
நேற்று இரவு 8 மணிக்கு அமுலான ஊரடங்கு சட்டம் இன்றும், நாளையும் அமுலில் இருக்கும். இந்நிலையில் 27ம் திகதி திங்கள் கிழமை அதிகாலை 5 மணிக்கு
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவிருக்கின்றது. இதில் உயர் ஆபத்துள்ள பகுதிகளும் உள்ளடக்கப்ப ட்டிருக்கின்றன. எனினும் மறு அறிவித்தல்வரும்வரையில்,
கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்குள் உள்நுழைவதும், அந்த மாவட்டங்களில் இருந்து வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று அதிகாலை வெளியானது.