இலங்கையில் கொரோனா நிலமை இதுவே..! 414 நோயாளர்கள், 300 பேர் சிகிச்சையில், 107 பேர் குணமடைந்தனர், மக்கள் பீதியடைய தேவையில்லை..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக அதிகரி த்திருக்கும் நிலையில், தற்போதுள்ள நிலையில், 300 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 414 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இ துவரையில் 107 பேர் குணமடைந்துள்ளதுடன், 300 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் நாட்டில் 183 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நோயாளர்கள் எண்ணிக்கை தினசரி சடுதியாக அதிகரித்துக் கொண்டிருந்தாலும் வெளிநாடுகளைபோல் அல்ல.
ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கை யில் மிக தீவிரமாக செயற்பட்டவண்ணமே உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப் பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடப்பது
தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பானது.