SuperTopAds

60 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று..! 409 ஆக அதிகரித்த நோயாளர் எண்ணிக்கை, மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
60 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று..! 409 ஆக அதிகரித்த நோயாளர் எண்ணிக்கை, மக்களே அவதானம்..

வெலிசறை கடற்படைமுகாமில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 30 கடற்படைச் சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று அதே முகாமை சேர்ந்த 30 கட்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இன்றும் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி இதுவரை கடற்படை வீரர்கள் 60 பேர் உட்பட 

மொத்தம் 409 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.