கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரம்..! மீண்டும் ஒரு அதிரடி தீர்மானத்தை எடுத்தது சுகாதார அமைச்சு..
இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக தனியார் வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றை கண்டறியும் பிசிஆர் (Polymerase Chain Reaction) பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை நாளாந்தம் ஆயிரம் பேருக்கு முன்னெடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது சுமார் 500 பேருக்கு மட்டுமே நாளாந்தம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.