SuperTopAds

ஜனாதிபதி மீண்டும் உத்தரவு..! வர்த்தமானி வெளியானது, 25 மாவட்டங்களிலும் முப்படையினர் களத்தில்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி மீண்டும் உத்தரவு..! வர்த்தமானி வெளியானது, 25 மாவட்டங்களிலும் முப்படையினர் களத்தில்..

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகளுக்காக முப்படையினருக்கும் அதிகாரமளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று மீண்டும் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாகிய நான் முப்படையினரையும், 

அறிவித்தலில் குறித்து காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இன்று முதல் நடைமுறைக்கு வருமாறு இந்த கட்டளை மூலம் அழைக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.