SuperTopAds

யாழ்.மாவட்ட செயலர், மாகாண சுகாதார பணிப்பாளர் போன்றவர்களைபோல் சிறப்பு அனுமதி பெற்றே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தேன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலர், மாகாண சுகாதார பணிப்பாளர் போன்றவர்களைபோல் சிறப்பு அனுமதி பெற்றே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தேன்..

யாழ்.மாவட்ட செயலர், மாகாண சுகாதார பணிப்பாளர் போன்றவர்கள் கொழும்பு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதியைபோல் சிறப்பு அனுமதியே எனக்கும் வழங் கப்பட்டிருக்கின்றது. என கூறியிருக்கும், 

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி உமாச்சந்திர பிரகாஸ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மறுநாளே அவர்களால் ஊடகங்களை சந்திக்கலாம் என்றால் நான் ஏன் சந்திக்க முடியாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. எனக்கு வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு 

வழங்கப்பட்டுள்ளமையினைப் போன்றதொரு சிறப்பு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நான் கடந்த 10ஆம் திகதி கொழும்பிற்கு சென்றிருந்தேன். இதன்போது ஒரு தடவை மாத்திரமே மாநகர சபைக்கு சென்றிருந்தேன். 

அங்கிருந்து வெளியே வரும்போது தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன், அதற்கான சிட்டையினையும் பெற்றுக்கொண்டிருந்தேன். நான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்பதனால் என்னால் நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது. 

இதன்காரணமாக கடந்த 10ஆம் திகதி கொழும்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் இடத்திற்கு சென்றிருந்த நான் நிவாரணப்பொருட்களை வழங்கவில்லை.முப்படையினரும், பொலிஸாருமே 

நிவாரணப்பொருட்களை வழங்கியிருந்தனர். நான் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒரு மீற்றர் சமூக இடைவெளியினை பின்பற்றியே இந்த பணிகளை பார்வையிட்டிருந்தேன். பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தேன். 

தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எந்வொரு அறிவுறுத்தல்களும் எனக்கு இதன்போது வழங்கப்படவில்லை.எனினும் நேற்றைய தினமே நான் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தேன். கொழும்பிற்கு சென்றிவிட்டு வந்து மறுதினமே 

யாழ்.அரசாங்க அதிபரினால் ஊடக சந்திப்பினை நடாத்த முடியும் என்றால் 11 நாட்களின் பின்னர் நான் ஊடக சந்திப்பினை நடாத்துவதில் என்ன தவறுள்ளது. நான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்ற காரணத்தினால் 

மாத்திரமே எனக்கு எதிராக அரசியல் நோக்கோடு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றார்.