நாடு அபாயத்தில் இருக்கும்போது பொது தேர்தலை நடத்தமாட்டோம்..! ஜனாதிபதிக்கு முகத்தில் அறைந்த மஹிந்த..

ஆசிரியர் - Editor I
நாடு அபாயத்தில் இருக்கும்போது பொது தேர்தலை நடத்தமாட்டோம்..! ஜனாதிபதிக்கு முகத்தில் அறைந்த மஹிந்த..

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வரையில் பொது தேர்தலை நடாத்தமாட்டோம். என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக கருத்து கூறியிருக்கின்றார். 

பகுதி பகுதியாக தேர்தலை நடத்த சாத்தியப்பாடுகள் இல்லை, அவ்வாறான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சகல கட்சிகளின் நிலைப்பாட்டினை ஆராயவேண்டும் எனவும் கூறுகின்றார்.

பொதுத் தேர்தல் குறித்து அரசியல் ரீதியாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னமும் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிராத நிலையில் 

அது குறித்து தெளிவுபடுத்துகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவற்றை கூறினார். ஆனால் இப்போதைய சூழ்நிலை அவ்வாறு அல்ல. யார் எதிரி என கண்ணுக்கு தெரியவில்லை. 

தாக்கம் எவ்வாறானது என்பதை கண்டறியவும் முடியாதுள்ளது. அதுமட்டுமல்ல பாராளுமன்ற தேர்தல் ஒன்றினை நடத்தும் வேளையில் 55 வீதமளவில் வாக்குகள் பதியப்படுவது போதுமானது என கூற முடியாது. 

குறைந்த பட்சம் 70 வீதமான வாக்குகளையேனும் மக்கள் பிரயோகித்திருக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை,கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முதலில் முற்றுமுழுதாக நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். 

அதற்கான வேலைகளை முதலில் முன்னெடுக்கட்டும். பின்னர் தேர்தல் குறித்து பார்க்கலாம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் தேர்தலை வைக்க மாட்டோம். சுகாதார அதிகாரிகள் கூறும் வரையில் எமது பக்கம் எந்த தீர்மானமும் எடுக்கப்படாது. ஒரு சிலர் கூறுவதை கேட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு