வடகொரிய அதிபரின் உடல்நிலை கவலைக்கிடம்!!
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பில் அமெரிக்கா உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் அறுவை சிகிச்சைப்பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அணு ஆயுத சோதனை போன்ற பல விவகாரங்கள் மூலம் அமெரிக்காவை, வட கொரியா எதிர்த்து வந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் உடல்நிலை குறித்த தகவலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
வடகொரிய அதிபரின் பிறந்த தின கொண்டாட்டத்தில் கூட அந்நாட்டு அதிபர் ஜிம் ஜாங் கலந்துக்கொள்ளவில்லை என்பதை அமெரிக்க ஊடகம் ஒன்று சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் கொள்வது பொருத்தமற்ற விடயமெனவும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனது கொண்டாட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாகவம் வட கொரிய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளனார்.