ஆபத்தின் உச்சம்..! ஒரு நாளில் 33 நோயாளர்கள், 242 குடும்பங்களை சேர்ந்த 1010 பேர் இராணுவ கட்டுப்பாட்டுக்குள்..
கொழும்பு- பண்டாரநாயக்க மாவத்தையில் 33 பேர் ஒரு நாளில் கொரோனா தொற்று க்குள்ளான நிலையில், 242 குடும்பங்களை சேர்ந்த 1010 பேர் இராணுவ தனிமைப்படு த்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 24 பேரும், பிற்பகலில் 8 பேரும், மாலையில் ஒருவரும் கொரோனா தொ ற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இலங்கையில் 33 நோ யாளர்கள் ஒரு இடத்தில் ஒரு நாளில் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
மேலும் இந்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்திருக்கின்றது. இந்நிலையிலேயே 1010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ளனர்.