வேலையிழப்பை தவிர்ப்பதற்கான ஊதிய திட்டம் இன்று ஒன்லைனில் ஆரம்பம்!
பிரித்தானிய அரசு கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து பொருளாதாரத்தை பாதுகாக்கும் முகமாக தொழிலார்களுக்கு ஊதியம் செலுத்த முடியாத நிறுவனங்கள் அவர்களை தொடர்ந்து தமது ஊழியர்களாக வைத்திருக்கும் சூழலில் அவர்களுடைய ஊதியத்தின் 80% வரையிலான பகுதியை தாம் செலுத்துவதாக தெரிவித்து இருந்தது.
ஆயினும் மிக அதிகமான ஊதியமாக 2,500 பிரித்தானிய பவுண்டுகளை மட்டுமே அரசு செலுத்தும். இதன் காரணமாக பெரும்தொகையான ஊதியத்தை பெறுபவர்கள் அதிகப்படியாக £2500 மட்டுமே ஒரு மாதத்துக்கு பெற முடியும். ஆயினும் முதலாளிகள் விடுபட்டுப் போன 20% ஊதியத்தை அவர்கள் விரும்பினால் தமது தொழிலாளர்களுக்கு செலுத்தத்தலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தொழிலார்கள் 1 மார்ச் 2020 இல் இருந்து ஊதியத்தை பெற முடியும், ஆயினும் அவர்கள் தமது முதலாளிகளுக்கு இந்த நேரத்தில் வேலைசெய்ய கூடாது.
இந்த திட்டம் முன்பு அறிவித்து இருந்தாலும் இப்பொழுது தான் ஒன்லைன் மூலம் செயல்வடிவத்துக்கு வந்துள்ளது. பல மில்லியன் தொழிலார்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்று தெரியவருகிறது.
இந்த திட்டம் ஆரம்பித்த 30 நிமிடத்தில் 67,000 விண்ணப்பங்கள் செய்யப்பதாக தெரிவிக்கப்படுகிறது.