SuperTopAds

இலங்கை அபாயக்கட்டத்தை கடந்துவிட்டது என்கிறார் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், 254 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கை அபாயக்கட்டத்தை கடந்துவிட்டது என்கிறார் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், 254 ஆக உயர்ந்த நோயாளர் எண்ணிக்கை..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், இலங்கை அபாய கட்டத்தை கடந்து விட்டது. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியிருக்கின்றார். 

நேற்றய தினம் இரவு கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 248 ஆக காணப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 254 ஆக உயர்வடைந்திருக்கின்றது. 

தற்போது வைத்தியசாலைகளில் 161 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன், 86 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும் 7 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியிருக்கின்றார். மேலும் 18 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.